
சினேகாவுக்கு பிடித்த ஃபிரண்டு பிள்ளையார்தான். உலகின் எந்த மூலைக்கு போனாலும் ஒரு பிள்ளையார் சிலையோடு வருவதுதான் அவரது ஹாபி. இப்படி சேகரித்து சேகரித்தே அவரது வீட்டில் நு£ற்றுக்கணக்கான பிள்ளையார்கள் இருக்கிறார்களாம். |
| இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு சினேகா வீட்டில் இருக்கிற பிள்ளையார்களுக்கெல்லாம் ஸ்பெஷல் பூஜை நடந்திருக்குமே? அதுதான் இல்லையாம். ஒவ்வொரு வருஷமும் பிள்ளையார்ஜியை விழுந்து விழுந்து கவனிக்கும் சினேக், இந்த வருடம் டூ விட்டுவிட்டாராம் தனது நண்பருக்கு. அதனால் தடபுடல் விருந்துகளை குறைத்துக் கொண்டு சைலண்டாக ஒரு வணக்கம் போட்டதோடு சரி. பிள்ளையார் சதுர்த்தி முடிந்தது. அழகான பொண்ணுக்கும், ஆபத்பாந்தவனுக்கும் என்ன பிரச்சனை? வேறொன்றுமில்லை. அவ்வப்போது இமேஜை குலைப்பது மாதிரி பிரச்சனைகள் வந்து தொலைக்கிறதே, அதை தடுக்கவில்லையே இந்த நண்பன். அதனால்தான் இந்த வருடம் சுமார் பூஜையோடு நிறுத்திக் கொண்டாராம். எல்லா பிள்ளையாரும் வச்சிருக்காரு. எஸ்எம்எஸ் பிள்ளையாரும் இருப்பாரோ? |





