Sunday, August 30, 2009

சேரன் - நேற்று இல்லாத மாற்றம்




பொக்கிஷம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததில் சேரனுக்கு வருத்தம். அவரைவிட அதிக வருத்தம் சேரனின் ரசிகர்களுக்கு. அவர்களின் பாராட்டும், பாஸிட்டிவ்வான விமர்சனமுமே தற்போது சேரனுக்கு எனர்‌ஜி பூஸ்ட்.
பொக்கிஷம் ஓடும் திரையரங்களுக்கு நே‌ரில் சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்திவரும் சேரன், இனி சோதனை முயற்சிகள் செய்வதில்லை, குறிப்பாக அடுத்தவர் தயா‌ரிப்பில் என்று புதிய முடிவெடுத்திருப்பதை சில நாட்கள் முன்பு குறிப்பிட்டிருந்தோம். இந்த புதிய முடிவுடன் வேறொரு மாற்றத்தையும் சேரனிடம் காண முடிகிறது. அது தோற்றத்தில் உள்ள மாற்றம்.

பொக்கிஷம் படத்திற்குப் பிறகு மிஷ்கின் இயக்கத்தில் யுத்தம் செய் படத்தில் நடிப்பதாக இருந்தார் சேரன். சேரனை வைத்து படமெடுப்பதாக மிஷ்கினும் அறிவித்திருந்தார். இந்தப் படத்துக்காக சேரனும் அடர்த்தியாக தாடி வளர்த்திருந்தார்.

மிஷ்கின் கமலை சந்தித்த பிறகு எல்லாமே மாறிப் போனது. கமல் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க பச்சைக் கொடி காண்பித்ததால், யுத்தம் செய் படத்திலிருந்து சேரனை கழற்றிவிட்டு கமலுக்கு கதை பண்ண ஆரம்பித்தார் மிஷ்கின். இந்த திடீர் பல்டி காரணமாக யுத்தம் செய் படத்துக்கு வளர்த்த அடர்த்தியான தாடியை ஷேவ் செய்து பளபளப்பாக மாறியிருக்கிறார் சேரன்.

அடுத்து பெ‌ரிய ஹீரோவை வைத்து பாரசீக ரோஜாவை அவர் இயக்குவார் என கூறப்படுகிறது. ஆல் தி பெஸ்ட் சேரன்.

No comments:

Post a Comment