
| சாதாரண படங்களே இந்தி பேச ஆசைப்படம் போது கலைப்புலி தாணு தயாரிப்பில் பிரமாண்டமாகச் செலவு செய்து எடுக்கப்பட்ட ‘கந்தசாமி’ இந்தி பேசமாட்டாரா என்ன? |
சீயான் விக்ரம் - ஸ்ரேயா நடிப்பில் வெளியான படம் ‘கந்தசாமி’. இந்தப் படம் சுசி கணேசன் இயக்கத்தில் வெளியாகி கலக்க்ஷனில் முதல் வாரத்தில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை அப்படியே இந்தியில் டப் செய்து வெளியிட்டால் என்ன என்ற யோசனை தாணு மனதில் தோன்ற, உடனே அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார். ஏற்கனவே விக்ரம் நடிப்பில் வெளியான ‘அந்நியன்’ இந்தியில் ‘அபரசித்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ஓரளவு கல்லா கட்டியது. இது தாணுக்கு மேலும் தெம்பைக் கொடுத்துள்ளது. அதிலும் மணிரத்னத்தின் இந்தி ‘ராவண்’ படத்தில் விக்ரம் நடித்து வருவதும் விக்ரமுக்கு பாலிவுட்டில் ஒரு மாஸ் உருவாக்கி உள்ளது. விரைவில் ‘கந்தசாமி’ இந்திசாமி ஆவார். |
No comments:
Post a Comment