Sunday, September 13, 2009

விஜயின் அரசியல் பிரவேசம்... சித்தர் குறித்த தேதி


திருவண்ணாமலை சித்தர் சொல்லிதான் அரசியலில் குதிக்க போகிறாராம் விஜய். அடிப்படையில் கிறிஸ்துவராக இருந்தாலும், திருவண்ணாமலை, திருக்கடையூர் என்று இந்து கடவுள்கள் மீதும் அலாதி பக்தி வைத்திருக்கிறார் விஜயின் அம்மா ஷோபா. அதனால் மேற்படி திருத்தலங்களுக்கு அவ்வப்போது விசிட் அடிக்கும் அவர் போகிற இடத்திலெல்லாம் பிள்ளையின் அரசியல் பிரவேசத்திற்காகவும் வேண்டிக் கொள்வாராம். அப்படி திருவண்ணாமலைக்கு போகிற போதுதான் எப்போது அரசியலுக்குள் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற உத்தரவும் வந்ததாம் சித்தரிடமிருந்து. சித்தன் போக்கு, சிவன் போக்கு என்றிருக்கும் சித்தர்கள் கூட, இப்போதெல்லாம் அரசியல் ஆருடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்களே என்ற சந்தேகம் இருக்கட்டும். திருமதி ஷோபா சந்திரசேகர் சமீபத்தில் ஒரு அற்புதமான காரியம் செய்திருக்கிறார்.

அபிராமி பட்டர் பாடிய பாடல்களை தனது குரலில் பாடி ஆடியோ தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். கடந்த வாரம் இதற்காக திருக்கடையூர் அபிராமி சன்னதிக்கு சென்றிருந்தாராம். அந்த சன்னதியில் வைத்தே இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை சிம்ப்பிளாக நடத்தியிருக்கிறது கோவில் நிர்வாகம்.

விஜயின் அம்மா கோவிலுக்கு வருகிற தகவலை ரகசியமாகவே வைத்திருக்க நினைத்தாலும், நடக்கிற காரியமா அது? விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் கோவில் வாசலில் முற்றுகையிட்டார்களாம். ரசிகர்களின் அன்புக்கு நின்று நிதானமாக நன்றி சொல்ல கூட முடியாதளவுக்கு தள்ளுமுள்ளு.

கோவிலில் என்ன வேண்டிக் கொண்டிருப்பார்? சித்தர் குறித்த தேதி சீக்கிரம் வரட்டும் என்றா?

Friday, September 11, 2009

'சுல்தான்' எப்ப வருவார்?




ரஜினி ரசிகர்களின் இப்போதையே ஒரே கேள்வி சுல்தான் ரிவீஸ் எப்போது என்பதுதான். காரணம் எந்திரன் படம் 85 சதவிகிதம் முடிந்துவிட்டதாக ரஜினி கூறியுள்ளார். அதே போல சுல்தான் படமும் 85 சதவிகிதம் முடிந்துள்ளதாக சௌந்தர்யா கூறியுள்ளார்.
எனில் எந்தப் படம் முதலில் வெளியாகும்? சுல்தான் எந்த மாதிரி படமாக இருக்கும்?

"இது அக்மார்க் ரஜினி படம்... நானும் அதிரடியான ரஜினி படங்களுக்கு ரசிகைதான். அந்தப் படங்களை விட அனைத்து வகையிலும் மேம்பட்ட படமாக சுல்தான் இருக்கும்.

நகரத்து ரசிகர்களாக இருந்தாலும், கிராமத்து ரசிகர்களாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் சுல்தான் பார்க்க திரையரங்குக்கு வரவேண்டும் என நினைக்கத் தூண்டும் அளவுக்குக் காட்சிகளில் பிரமாண்டமும் பொழுதுபோக்கு அம்சங்களும் அத்தனை சிறப்பாக வந்துள்ளன.

எடுத்த வரையில் அப்பாவுக்கு பரம திருப்தி. இன்னும் சில வாரங்களில் முழுவதுமாக படப்பிடிப்பு முடிந்துவிடும்.

இந்தப் படத்தின் பல சிறப்புகளை சர்ப்பரைஸ் பேக்கேஜாக வைத்துள்ளேன். அவை முதல் காட்சி பார்க்கும்போது மட்டும்தான் உங்களுக்கு தெரியவரும். அதுதான் அடுத்த காட்சிக்கும் உங்களை இழுத்து வரும்..., என்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த் அசைக்க முடியாத நம்பிக்கையுடன்.

'படத்தின் பட்ஜெட் ரூ.700 மில்லியன்... இதில் இன்னும் சில மில்லியன்கள் கூடினாலும் ஆச்சரியமில்லை...', என்கிறார் ஆக்கர் ஸ்டுடியோவின் தலைமை அலுவலர் (மார்கெட்டிங்) கார்த்திக் . எதிர்பார்க்கும் வசூல் ரூ.2.5 பில்லியன்களாம். இதிலும் கொஞ்சம் கூடினால் வியப்பில்லைதானே!

ரிலீஸ் தேதி எந்திரனுக்கு முன்பா பின்பா?

அதை இன்னும் முடிவு செய்வில்லை. ஜனவரி 2010க்குப் பிறகு அறிவிக்கப்படும் என்கிறார்கள்.
http://i40.tinypic.com/2s01d6p.jpg

Tuesday, September 1, 2009

நடிகர் சிம்பு வீட்டில் ரசிகர்கள் மோதல்


அரசியல் கட்சிகள் ரேஞ்சுக்கு சிம்புவின் ரசிகர் மன்றம் மாறிவிட்டிருக்கிறது.
சிம்பு ரசிகர் மன்றத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தவரை சிம்பு தூக்கிவிட அவர் தன் சகாக்கள் சிலரைக் கூட்டி வந்து நடிகர் சிம்புவின் வீட்டின் முன்பு நின்று கொண்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து சிம்பு வந்து சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது வீட்டின் வெளியே நின்ற ரசிகர்களுக்கும் வீட்டின் உள்ளே நின்று கொண்டிருந்த ரசிகர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பின்பு காவல்துறையினர் வந்து ரகளையில் ஈடுபட்டவர்களை அடித்து விரட்டியுள்ளார்கள். இதனால் சிம்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ரகளையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்ய முயற்சித்தனர். ஆனால், ‘இது எங்கள் ரசிகர் மன்ற பிரச்சனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நடவடிக்கை வேண்டாம்’ என்று சிம்பு கேட்டுக் கொண்டதால் கைது செய்யாமல் விட்டுவிட்டனர்.

ம்... நல்லா படம் காட்டுறாங்கப்பா..

முன்பு கணவன் இப்போது நண்பன் - சோனியா அகர்வால்




செல்வராகவனுக்கும் சோனியாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த கருத்து வேறுபாட்டுக்கு நடிகை ஆன்ட்ரியாவுடன் செல்வராகவனுக்கு இருந்த தொடர்பு என்று தனிப்பட்ட முறையில் சோனியா மனதில் சில புழுக்கங்களும் இருந்து வந்துள்ளன. இது பின்பு கருத்து வேறுபாடு தோன்றவும் காரணமாக அமைந்திருக்கிறது.

“கணவராகப் பார்த்த செல்வராகவனை இப்போது எனது நண்பராகப் பார்க்கிறேன். எப்போதாவது போனில் பேசிக் கொள்கிறோம். ஆன்ட்ரியாவால் நாங்கள் பிரிகிறோம் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால் நான் அது பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன். செல்வராகவன் படங்களில் நடிப்பேனா என்று இப்போது சொல்ல முடியாது...” என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார் சோனியா அகர்வால். இதையடுத்து சோனியா விரைவில் படங்களில் தலைகாட்டுவார் என்று தெரிகிறது.

ம்... அக்கா அண்ணி வேடம்தான் கிடைக்கும்...

விஜய் படம் புறக்கணிப்பு - தமிழ் சங்கம் அதிரடி




விஜய் படங்களை புறக்கணிப்பது என கனடா தமிழ் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் விஜய்க்கு புதுச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமா வர்த்தகத்தில் வெளிநாட்டுவாழ் ஈழத் தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு. கனடா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களை நம்பிதான் படங்களின் வெளிநாட்டு உ‌ரிமை பெரும் தொகைக்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், விஜய் நடிக்கும் படங்களை புறக்கணிப்பது என கனடா தமிழ் சங்கம் அறிவித்துள்ளது, விஜய் படங்களின் வர்த்தகத்தை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போ‌ரில் அப்பாவி ஈழத் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். இந்த படுகொலைக்கு இலங்கை அரசுக்கு போர் பலமும், ஆன்ம பலமும் கொடுத்துதவியது இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு. இலங்கையின் போர் குற்றங்கள் சர்வதேச அரங்கில் விவாதிக்கப்படாமல் மூடி மறைக்கவும் உதவிபு‌ரிந்தது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதான். சோனியாகாந்திக்கு புலிகள் மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பே இந்த படுகொலைகளுக்கு மூலகாரணம் என்று ஈழத் தமிழர்கள் பலரும் கருதுகின்றனர்.

இதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள ஈழத் தமிழர்கள் காங்கிரஸ் கட்சின் மீது அளவுகடந்த வெறுப்புடன் உள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் காங்கிரஸ் ராகுல்காந்தியை சந்தித்து அரசியல் பற்றி விவாதித்தது ஈழத் தமிழர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கனடா தமிழ் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜய் அரசியலில் ஈடுபடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் அவருடைய படங்களை புறக்கணிப்போம் என்று திட்டவட்டமாக தெ‌ரிவித்துள்ளனர்.

ஒரு தமிழனாக இந்த அறிக்கைக்கு விஜய் மரியாதை செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Sunday, August 30, 2009

பிடித்த நடிகையும் பிள்ளையார் சதுர்த்தியும்!





சினேகாவுக்கு பிடித்த ஃபிரண்டு பிள்ளையார்தான். உலகின் எந்த மூலைக்கு போனாலும் ஒரு பிள்ளையார் சிலையோடு வருவதுதான் அவரது ஹாபி. இப்படி சேகரித்து சேகரித்தே அவரது வீட்டில் நு£ற்றுக்கணக்கான பிள்ளையார்கள் இருக்கிறார்களாம்.
இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு சினேகா வீட்டில் இருக்கிற பிள்ளையார்களுக்கெல்லாம் ஸ்பெஷல் பூஜை நடந்திருக்குமே? அதுதான் இல்லையாம். ஒவ்வொரு வருஷமும் பிள்ளையார்ஜியை விழுந்து விழுந்து கவனிக்கும் சினேக், இந்த வருடம் டூ விட்டுவிட்டாராம் தனது நண்பருக்கு. அதனால் தடபுடல் விருந்துகளை குறைத்துக் கொண்டு சைலண்டாக ஒரு வணக்கம் போட்டதோடு சரி. பிள்ளையார் சதுர்த்தி முடிந்தது.

அழகான பொண்ணுக்கும், ஆபத்பாந்தவனுக்கும் என்ன பிரச்சனை? வேறொன்றுமில்லை. அவ்வப்போது இமேஜை குலைப்பது மாதிரி பிரச்சனைகள் வந்து தொலைக்கிறதே, அதை தடுக்கவில்லையே இந்த நண்பன். அதனால்தான் இந்த வருடம் சுமார் பூஜையோடு நிறுத்திக் கொண்டாராம்.

எல்லா பிள்ளையாரும் வச்சிருக்காரு. எஸ்எம்எஸ் பிள்ளையாரும் இருப்பாரோ?

'மாமியாரா வரட்டுமா?'-சிம்ரன்




தனுஷுக்கு மாமியாராக நடிக்க நான் மறுத்துவிட்டதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. இப்போது கூப்பிட்டாலும் மாமியார் வேஷம் கட்ட நான் ரெடி என்கிறார் நடிகை சிம்ரன்.
ரஜியின் வெற்றிப் படமான 'மாப்பிள்ளை'யை ரீமேக் செய்கிறார் அவரது நிஜ மாப்பிள்ளை தனுஷ். இந்தப் படத்தில் தனுஷ் மாமியாராக நடிக்க பல நடிகைகளிடம் பேசிப் பார்த்து, கடைசியில் ஸ்ரீதேவியை ஓகே செய்துள்ளனர்.

அதற்கு முன் சிம்ரனிடம் இந்த வேடத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டதாகவும், அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த விஷயம் தனக்கு இப்போதுதான் தெரியும் என்றும், தனுஷுக்கு மாமியாராக நடிக்க தனக்கு சம்மதமே என்றும் கூறியுள்ளார்.

"என்னைச் சுற்றி இப்படித்தான் சம்பந்தமே இல்லாதவர்கள் குழப்பம் விளைவித்துவிடுகிறார்கள். என்னிடம் இது தொடர்பாக யாரும் பேசவே இல்லை. ஆனால் நான் நடிக்க மறுத்துவிட்டதாக அதற்குள் செய்தி கசியவிட்டுவிட்டார்கள். என்ன செய்வது?" என்கிறார் வருத்தத்துடன் சிம்ரன்.

என்ன செய்வது... 'முற்பகல் செய்யின்...' பழமொழியை நினைத்துக் கொள்ள வேண்டியதுதான் அம்மணி!
.

விளம்பரத்தில் சூர்யா - ஜோதிகா ஜோடி




மாதவன் - வித்யாபாலன் ஜோடியை வைத்து ஏர்டெல் நிறுவனம் தனது விளம்பரத்தை செய்து கொண்டிருக்க, ஏர்செல் நிறுவனமோ நிஜ ஜோடிகளான சூர்யா ஜோதிகாவை வைத்து விளம்பரத்தை வெளியிட்டு வருகிறது.
சூர்யா ஏர்செல் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருப்பதால் இந்த விளம்பரத்துக்கான ஐடியா கிடைத்ததும், ஜோதிகாவே இந்த விளம்பரத்தில் சூர்யாவுடன் நடித்தால் ஒரிஜினாலிட்டியாக இருக்கும் என்று நினைத்த ஏர்செல் நிறுவனம் சூர்யாவை கேட்டுள்ளது.
அவரோ ஜோதிகாவிடமே கேட்டுக்கொள்ளும்படி கூறியுள்ளார். ஜோதிகாவும் ஓ.கே. சொல்லிவிட இப்போது இந்த விளம்பரம் பட்டி தொட்டி எங்கும் கலக்கிக் கொண்டு வருகிறது.
‘ஏர்டெல் ரீல் ஜோடியைப் போட்டா, ஏர்செல் ரியல் ஜோடியைப் போட்டு கலக்குறாங்க’ என்று பார்க்கிறவர்கள் எல்லாரும் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நமீதா மீது நடவடிக்கை? கோடம்பாக்கத்தில் பரபரப்பு





தான் நடிக்காத பட விழாக்களில் கூட கலந்து கொள்பவர்தான் நமீதா. ஆனால் என்ன பிரச்சனையோ? இவரே ஹீரோயினாக நடிக்கும் ‘அழகான பொண்ணுதான்’ பட விழாவுக்கு வரவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த ஆதி நாராயணா பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அப்படத்தின் நாயகி மீராஜாஸ்மின் வரவில்லை. அந்த மேடையிலேயே இதை கண்டித்தார் டைரக்டர் பேரரசு. அதன் தொடர்ச்சியாக இந்த படத்தின் நாயகியான நமீதாவும் வராமல் போனதால் தயாரிப்பாளர் சங்கம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

விழா மேடையிலேயே இதற்கெல்லாம் முடிவு கட்டுவது போல பேசினார் தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன். “இப்போதெல்லாம் எந்த நடிகர் நடித்த படம் என்று யாரும் கேட்பதில்லை. கதைதான் முக்கியம் என்கிறார்கள். ஒரு படத்துக்கு இசை அமைப்பாளரை ஒப்பந்தம் செய்தால் அவர் எப்போது பாட்டு தருவார் என்று கூட தெரியவில்லை. ஆனால் சுந்தர் சி.பாபு தயாரிப்பாளர்களின் இசை அமைப்பாளராக இருக்கிறார். இங்கு தயாரிப்பாளர் சங்க அனுமதியுடன் ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறேன். இனிமேல் படம் சம்பந்தப்பட்ட எந்த விழாவாக இருந்தாலும் அப்படத்தில் நடிக்கும் நடிகைகள் கலந்து கொள்ள வேண்டும். அப்படி கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் காரசாரமாக!

இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று ஃபெப்சி தலைவர் வி.சி.குகநாதன் தெரிவிக்க, டிமிக்கி கொடுக்கும் நடிகைகள் ஆட்டம் கண்டிருக்கிறார்களாம்.

சேரன் - நேற்று இல்லாத மாற்றம்




பொக்கிஷம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததில் சேரனுக்கு வருத்தம். அவரைவிட அதிக வருத்தம் சேரனின் ரசிகர்களுக்கு. அவர்களின் பாராட்டும், பாஸிட்டிவ்வான விமர்சனமுமே தற்போது சேரனுக்கு எனர்‌ஜி பூஸ்ட்.
பொக்கிஷம் ஓடும் திரையரங்களுக்கு நே‌ரில் சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்திவரும் சேரன், இனி சோதனை முயற்சிகள் செய்வதில்லை, குறிப்பாக அடுத்தவர் தயா‌ரிப்பில் என்று புதிய முடிவெடுத்திருப்பதை சில நாட்கள் முன்பு குறிப்பிட்டிருந்தோம். இந்த புதிய முடிவுடன் வேறொரு மாற்றத்தையும் சேரனிடம் காண முடிகிறது. அது தோற்றத்தில் உள்ள மாற்றம்.

பொக்கிஷம் படத்திற்குப் பிறகு மிஷ்கின் இயக்கத்தில் யுத்தம் செய் படத்தில் நடிப்பதாக இருந்தார் சேரன். சேரனை வைத்து படமெடுப்பதாக மிஷ்கினும் அறிவித்திருந்தார். இந்தப் படத்துக்காக சேரனும் அடர்த்தியாக தாடி வளர்த்திருந்தார்.

மிஷ்கின் கமலை சந்தித்த பிறகு எல்லாமே மாறிப் போனது. கமல் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க பச்சைக் கொடி காண்பித்ததால், யுத்தம் செய் படத்திலிருந்து சேரனை கழற்றிவிட்டு கமலுக்கு கதை பண்ண ஆரம்பித்தார் மிஷ்கின். இந்த திடீர் பல்டி காரணமாக யுத்தம் செய் படத்துக்கு வளர்த்த அடர்த்தியான தாடியை ஷேவ் செய்து பளபளப்பாக மாறியிருக்கிறார் சேரன்.

அடுத்து பெ‌ரிய ஹீரோவை வைத்து பாரசீக ரோஜாவை அவர் இயக்குவார் என கூறப்படுகிறது. ஆல் தி பெஸ்ட் சேரன்.

தலைவலியில் கார்த்தி படங்கள்




பருத்தி வீரனில் அறிமுகம் ஆனார் கார்த்தி. முதல் படம் என்பது தெரியாத அளவுக்கு நடிப்பில் பிச்சு உதறியிருந்தார்.
அடுத்தடுத்து படங்கள் வந்து கோலிவுட்டில் டாப் இடத்தைப் பிடிப்பார் என்று ஆளாளுக்கு கணித்துக் கொண்டிருக்க கார்த்தி செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவனில்’ புக் ஆனார்.
இந்தப் படத்திலும் கலக்கிவிடலாம் என்று நினைத்த கார்த்திக்கு வினை வேறு உருவத்தில் வந்தது. செல்வராகவன் இரண்டு வருடங்களை அலேக்காக தூக்கிச் சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டார். இந்த நேரத்தில்தான் ‘ஆயிரத்தில் ஒருவன்’ உருவாகி இருந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது போஸ்ட் புரடக்க்ஷன்ஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், ஆயிரத்தில் ஒருவனில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கார்த்தி கால்ஷீட் கொடுத்து நடித்த லிங்குசாமியின் ‘பையா’ படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இப்போதுதான் தலைவலி ஆரம்பமானது. இரண்டாவதாக ஆயிரத்தில் ஒருவன் வந்தால் நன்றாக இருக்கும் என கார்த்திக் எண்ண, லிங்குசாமியோ படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.
விரைவில் பையாவும், அதைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவனும் ரசிகர்களுக்கு விருந்தாகும

பாலிவுட்டில் குதிக்கும் ‘கந்தசாமி’





சாதாரண படங்களே இந்தி பேச ஆசைப்படம் போது கலைப்புலி தாணு தயாரிப்பில் பிரமாண்டமாகச் செலவு செய்து எடுக்கப்பட்ட ‘கந்தசாமி’ இந்தி பேசமாட்டாரா என்ன?
சீயான் விக்ரம் - ஸ்ரேயா நடிப்பில் வெளியான படம் ‘கந்தசாமி’. இந்தப் படம் சுசி கணேசன் இயக்கத்தில் வெளியாகி கலக்க்ஷனில் முதல் வாரத்தில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தை அப்படியே இந்தியில் டப் செய்து வெளியிட்டால் என்ன என்ற யோசனை தாணு மனதில் தோன்ற, உடனே அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார். ஏற்கனவே விக்ரம் நடிப்பில் வெளியான ‘அந்நியன்’ இந்தியில் ‘அபரசித்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ஓரளவு கல்லா கட்டியது. இது தாணுக்கு மேலும் தெம்பைக் கொடுத்துள்ளது.
அதிலும் மணிரத்னத்தின் இந்தி ‘ராவண்’ படத்தில் விக்ரம் நடித்து வருவதும் விக்ரமுக்கு பாலிவுட்டில் ஒரு மாஸ் உருவாக்கி உள்ளது. விரைவில் ‘கந்தசாமி’ இந்திசாமி ஆவார்.